முதல்வர் விழாவில் பாறைகள் சரிந்து விபத்து - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சி
ஆந்திர முதல்வர் கலந்துகொள்ள இருந்த விழாவில், திடீரென பாறைகள் சரிந்து விழுந்து விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி, வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ளது கனக துர்கா கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி உற்பசவத்தின் போது முதல்வர் கையால் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை கோவில் வளாகத்தில் முதல்வர் வருகைக்காக போடப்பட்ட பந்தல் அருகே திடீரென பாறைகள் சரிந்து விழுந்தன.
இதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓடினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர். பின்னர் தாமதமாக வந்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பட்டு வஸ்திரங்களை சமர்ப்பித்தார். பின்னர் விபத்துக்குள்ளான இடத்தைப் பார்வையிட்ட முதல்வர் கோவில் புனரமைப்புப் பணிகளுக்காக 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அறிவித்தார். இந்நிலையில் பாறைகள் சரிந்துவிழும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.