பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் - கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்த உத்தரவு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களின் மீது கிரிமினல் சட்ட நடைமுறைகளை கடுமையாக அமல்படுத்தும்படி மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-10-10 08:42 GMT
குற்ற நடவடிக்கை எடுப்பதில்  ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால் உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம்  ஹாத்ரஸில் 19 வயது தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டு மரணடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்