"பண்டிகை காலம் தொடக்கம்-எச்சரிக்கை அவசியம்" - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தல்

நவராத்திரி பண்டிகையுடன் இந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கவுள்ளது,.

Update: 2020-10-09 04:31 GMT
நவராத்திரி பண்டிகையுடன்   இந்தியாவில் பண்டிகைக்காலம் தொடங்கவுள்ளது,.  இந்த நிலையில் நோய்தொற்று பரவாமல் இருக்கும் வகையில்  பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்  கேட்டுக்கொண்டுள்ளார்,.  நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையின் போது விழிப்புடன் இருந்து நோய்த்தொற்று பரவுவதை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்,. கோவில்களுக்குள் அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்களை விட வேண்டும் எனவும் ஆலயங்களில் உள்ள சிலைகளையும் மத புத்தங்களையும் பக்தர்கள் தொட அனுமதிக்க கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்,. 
Tags:    

மேலும் செய்திகள்