'கியூ ஆர் கோடு' மூலமாக நடக்கும் மோசடி - "ஆன்-லைனில் பொருட்கள் வாங்கும்போது கவனம்"
குறைந்த விலையில் விற்பனை என்று கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்து கியூ ஆர் கோடு மூலம் மோசடி செய்யப்படுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற பல மோசடி சம்பவம் அதிகரித்து வருகிறது. கியூ ஆர் கோடு மூலம் இந்த மோசடி அரங்கேறி வருகிறது. உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து செயல்படும் திருட்டு கும்பல்,
ஆன்-லைனில் விலை அதிகமான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக விளம்பரம் செய்கின்றன. அதனை நம்பி பொருளை வாங்க முன் வருபவர்களிடம், பணத்தை தாங்கள் அனுப்பும் QR கோடில் செலுத்த சொல்கின்றனர். ஆனால், பணத்தை பெற்றவுடன் பொருட்களை அனுப்பாமல் ஏமாற்றி வருகின்றனர். குறிப்பாக வாகன விற்பனையின் போது மோசடி கும்பல், வாடிக்கையாளர்களை நம்ப செய்ய ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பயன்படுத்துகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கோவையில் ஊரடங்கு காலத்தில் இது போன்று வடமாநில கும்பல்களால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.