ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். நாடு முழுவதும் ஊரகப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் தொடர்பாக ஊராட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.