கேரளாவில் புதிதாக 2,154 பேருக்கு கொரோனா
கேரளாவில் புதிதாக இரண்டாயிரத்து 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கேரளாவில் புதிதாக இரண்டாயிரத்து 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது.புதிதாக கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 287 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 49 ஆயிரத்து 849 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 23 ஆயிரத்து 658 பேர் சிகிச்சையில் இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - ஒரே நாளில் 2,024 பேருக்கு புதிதாக தொற்று
டெல்லியில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 73 ஆயிரத்து 390ஆக உயர்ந்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 14 ஆயிரத்து 793 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 426 ஆக அதிகரித்துள்ளது.