அமேசான் இந்தியா நிறுவனம் மீது வழக்கு பதிவு - சிலருக்கு மட்டும் சலுகைகள் வழங்குவதாக குற்றச்சாட்டு

அமேசான் இந்தியா நிறுவனம் குறிபிட்ட சில சில்லரை விற்பனையாளர்களுக்கு பாரபட்சமான முறையில் சலுகைகளை அளிப்பதாக கூறி அதன் மீது 2,000 ஆன்லைன் வர்த்தகர்கள் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

Update: 2020-08-27 09:32 GMT
அமேசான்  இந்தியா நிறுவனம் குறிபிட்ட சில சில்லரை விற்பனையாளர்களுக்கு பாரபட்சமான முறையில் சலுகைகளை அளிப்பதாக கூறி அதன் மீது 2,000 ஆன்லைன் வர்த்தகர்கள் இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அமேசான் இந்தியாவின் மொத்த விற்பனை பிரிவு உற்பத்தியாளர்களிடம் இருந்து  மொத்தமாக கொள்முதல் செய்து அவற்றை சில ஆன்லைன் நிறுவனங்களுக்கு மிக மலிவான விலையில் விற்பதாக அகில இந்திய ஆன்லைன் விற்பனையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அந்த குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் போட்டியிட முடியமால் சிறிய நிறுவனங்கள்  நஷ்டமடைவதாக புகார் அளித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்