பேஸ்புக் நிறுவனத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் - ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்தும் ஆலோசனை

சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Update: 2020-08-21 05:03 GMT
சமூகவலைதளமான பேஸ்புக் நிறுவனத்திற்கு, நாடாளுமன்ற நிலைக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், வரும் செப்டம்பர் மாதம் 2-ம் தேதி பேஸ்புக் நிர்வாகிகள் நேரில் ஆஜராக விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இணையதள செய்தி ஊடக தளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்தும், மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என, நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது. இதே பிரச்சினை தொடர்பாக விவாதிக்க மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக பிரதிநிதிகளையும் இந்த குழு அழைத்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்