கொரோனா தொற்றால் உயிரிழந்த கணவர் - மனைவி, மகன், மகள் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்த சோகம்

கொரோனா தொற்றால் கணவர் உயிரிழந்த நிலையில் ஆறுதல் சொல்ல உறவினர்கள் வராததால் மனமுடைந்த மனைவி மற்றும் 2 பிள்ளைகள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-08-20 08:25 GMT
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வர ராவ். இவருக்கு சுனிதா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகளும் இருந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெங்கடேஸ்வர ராவ், கடந்த 16 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொற்றால் இவர் உயிரிழந்த காரணத்தால் இவரின் முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு நகராட்சி ஊழியர்களே உடலை எடுத்துச் சென்று அடக்கம்  செய்துள்ளனர். மேலும் கொரோனா குடும்பம் என உறவினர்களும் இவர்களிடம் பாராமுகம் காட்டி வந்தனர். இதனால் மனைவி, பிள்ளைகள் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர். ஆறுதல் கூற வேண்டிய உறவுகள் கூட தள்ளி நிற்கவே, மனதளவில் உடைந்து போனது இவர்களின் குடும்பம். இனி வாழ்ந்து என்ன ஆகப் போகிறது? என நினைத்த அவர்கள், கோதாவரி ஆற்றுக்கு சென்றுள்ளனர். மனைவி சுனிதா, மகள் லட்சுமி அபர்ணா, மகன் பனிக்குமார் ஆகிய 3 பேரும் கோதாவரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மகிழ்ச்சியாக வாழ்ந்த ஒரு குடும்பத்தை கொரோனா சிதைத்து போட்டுள்ளது காலம் செய்த பிழையே... 
Tags:    

மேலும் செய்திகள்