கொரோனாவுக்கான மருந்தில் முதல் வெற்றி - குரங்கிற்கு தடுப்பு மருந்து செலுத்தி சோதனை
கொரோனாவுக்கான மருந்தை குரங்கிற்கு முதல்கட்டமாக செலுத்தி பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் முதல் முறையாக கொரோனா வைரஸ் பரவி, தற்போது உலகம் முழுவதையும் கடுமையாக முடக்கியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பீய்ஜிங்கை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று, கோவிட்-19க்கான மருந்தை தயாரித்துள்ளனர். இந்திய வகையை சேர்ந்த குரங்கு ஒன்றுக்கு விஞ்ஞானிகள் மருந்தை செலுத்திய பின்னர், கொரோனா வைரஸ் இருக்குமிடத்தில் குரங்கை உலவ அனுமதித்தனர். இதன் பின்னர் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சோதித்ததில்தில் குரங்கின் உடல் நிலையில் கொரோனா வைரஸ் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் முதல்கட்ட பரிசோதனையில் வெற்றி கண்டுள்ள சீன விஞ்ஞானிகள், அடுத்ததாக மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர். இதனால் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.