"சிறைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ன? - நோட்டீஸ் அளித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்

சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது.

Update: 2020-03-16 11:20 GMT
சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசின் சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, திகார் போன்ற பெரிய சிறைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, சிறைச்சாலைகளில் கொரானா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து மாநில சிறைச்சாலை தலைமை இயக்குனர்கள், தலைமைச் செயலர்கள், மாநில சமூக நலத்துறை செயலர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ்  அளித்து உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்