குடியுரிமை சட்டத்தை எதிர்த்த போராட்டத்தில் வன்முறை - உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டதால் பதற்றம்
பீகாரில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்களும் அந்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியவர்களும், அந்த சட்டத்தை ஆதரிப்பவர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சீதாமரி என்ற இடத்தில், சிஏஏ மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டைக்கண்டித்து,ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு தரப்பினர் முழக்கமிட்டனர். அப்போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டதால் அந்த இடம் போர்க்களமானது.