இந்தியா, நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடி - பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஓலி தொடங்கி வைத்தனர்

இந்தியா மற்றும் நேபாளம் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-01-21 08:47 GMT
இந்தியா மற்றும் நேபாளம் இடையே வர்த்தகத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்திய உதவியுடன் ஜோக்பானி மற்றும் பிராட்நகர் இடையே அமைக்கப்பட்டு உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியை இருநாட்டு பிரதமர்களும் டெல்லியில் நடந்த நிகழ்வில் தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தோழமை உடன் உள்ள அண்டை நாடுகளுடனான  போக்குவரத்தை எளிமைப்படுத்த தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் வணிகம், கலை மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் மேலும் இணைந்து செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி, இருநாடுகள் இடையே உள்ள அனைத்து பிரச்சனைகளையும் பேசித் தீர்க்கும் வகையில், இருநாடுகளிலும் பெரும்பான்மை ஆதரவு உள்ள ஆட்சி உள்ளதாகவும், இதில் இந்தியாவுடன் நெருங்கி செயல்பட நேபாளம் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.




Tags:    

மேலும் செய்திகள்