"ரூ.102 லட்சம் கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள்" - செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தகவல்
தேசிய அளவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
"ரூ.102 லட்சம் கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்பு திட்டங்கள்"
செயல்படுத்தப்பட உள்ளதாக நிதி அமைச்சர் தகவல்
"4 மாதத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களை அடையாளம் கண்ட பணிக்குழு"
"உள்கட்டமைப்புகளை திட்டமிட அரசு - தனியார் பங்களிப்புடன் குழு"
"2020ஆம் ஆண்டின் பிற்பாதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு"
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், 2019ஆம் நிதியாண்டில் நிதி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தார், தேசிய அளவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். சுதந்திர தின உரையின்போது, அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில், 100 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்ததை நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக பணிக்குழு, அமைக்கப்பட்டு, நான்கு மாதத்திற்குள் 70 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, ரூ.102 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றை விரிவான திட்டமிடலுடன் முறையாக செயல்படுத்தவும், கண்காணிக்கவும், மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகளின் பங்களிப்புடன் தேசிய உள்கட்டமைப்பு திட்டமிடல் கூட்டமைப்பு National Infrastructure Pipeline (NIP) Coordination Mechanism ஒன்று செயல்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டின் பிற்பாதியில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.