மகாராஷ்டிரா: கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதம் ஒப்படைப்பு
பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பான்மை இல்லாததால் தான், முன்னதாக பாஜக ஆட்சி அமைக்க முடியவில்லை என்றார். தங்களிடம் ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்று அவர்கள் கடிதம் கொடுத்துள்ளதாக குறிப்பிட்ட சரத்பவார், தங்களால் ஆட்சி அமைக்க முடியாததை ஏற்றிருக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தங்கள் கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் மாளிகை அதிகாரிகளிடம் கொடுத்தனர். தங்கள் கூட்டணியில்,162 எம்.எல்.ஏ.க்களுடன் பெரும்பான்மை உள்ளதாகவும் அவர்கள் கூறினார்.