சபரிமலைக்கு பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை எடுத்துவர வேண்டாம் : மலையேறும் பாதைகளில் தூய குடிநீர் கிடைக்கும்

சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்ல தேசவம் போர்டு தடை விதித்துள்ளது.

Update: 2019-11-03 08:55 GMT
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை கொண்டு செல்ல தேசவம் போர்டு தடை விதித்துள்ளது. திருவிதாங்கூர் தேவசம் வாரியம் மற்றும் கேரள நீர் ஆணையம் ஆகியவை பம்பா, நிலாக்கல், சபரிமலை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கு போதிய அளவு குடிநீர் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக கேரளா தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மலையேற்ற பாதைகளிலும் பக்தர்களுக்கு சுத்தரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், நடப்பு சீசனில் சபரிமலை வரும் பக்தர்கள் குடிநீர் பாட்டில்களை எடுத்துவர வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்