கேரள மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - உயரதிகாரிகளுடன் முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை

கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடைவிடாத தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-08-08 10:15 GMT
கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து  வரும் இடைவிடாத தொடர் கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், ஆங்காங்கே நிலச்சரிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். மாவட்டங்களில் மழை மற்றும் அணைகளுக்கு வரும் நீர்வரத்து, மீட்புப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்