நேபாளில் மூழ்கடிக்கும் வெள்ளம்... வாகன ஓட்டிகள் சிரமம்

கனமழை காரணமாக அஸ்ஸாம், மும்பை, உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்கள் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச் சரிவில் சிக்கி தவிக்கின்றன.

Update: 2019-07-27 03:00 GMT
நேபாளில் பெய்துவரும் மழையால், எங்கும் வெள்ளம் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலையை மூழ்கடித்து ஓடும் வெள்ளத்தால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பிரம்மபுத்திரா நதியில் வெள்ளம் வடியாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கரையோரம் வசிக்கும் ஏராளமானோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் பெய்துவரும் மழையால், பாத்லபூர் பகுதி ரயில் நிலையம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். 

மும்பையில் மதுங்கா, நாரிமன் முனை உள்ளிட்ட பகுதிகளில், மழை நீர் சூழ்ந்துள்ளதால், பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
                     
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் பெய்யும் தொடர் மழையால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, சாலை அரிப்பு, மூழ்கடிக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



Tags:    

மேலும் செய்திகள்