உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு கிரெடிட் கார்டு திட்டம் : விவசாய கிரெடிட் கார்டு திட்டம் இன்று தொடங்கப்படுகிறது
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு பிரத்யேகமாக விவசாய கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகளுக்கு பிரத்யேகமாக விவசாய கிரெடிட் கார்டு வழங்கும் திட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது. மத்திய அரசும் உத்தர பிரதேச அரசும் இணைந்து விவசாய கிரெடிட் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த இருப்பதாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாநில விவசாய துறை அமைச்சர் சூரிய பிரதாப் சகி தெரிவித்துள்ளார். பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் இன்று முதல் இந்த மாதம் 31ஆம் தேதி வரை விவசாய கிரெடிட் கார்டு வழங்கப்பட உள்ளது. வங்கிகள், விவசாயத் துறை மற்றும் வருவாய் துறை இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்