இன்று ஜி.எஸ்.டி தினம் : கொண்டாட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு

ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.

Update: 2019-06-30 21:04 GMT
ஜிஎஸ்டி தினம் இன்று மத்திய அரசால் கொண்டாடப்படுகிறது. ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 2017 ஆம் ஆண்டு  ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் சட்டம் அமல்படுத்தப்பட்டது.  ஜூன் மாதம் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஜிஎஸ்டி மசோதாவை தாக்கல் செய்தார். 
அதன்படி, ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு இன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஜி.எஸ்.டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் ஜிஎஸ்டி விழா நடைபெற உள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஜிஎஸ்டி புதிய வரி அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்