பேஸ்புக் மூலம் பெண்களை வீழ்த்திய இளைஞர் கைது : மும்பை நடிகர் பெயரில் போலி கணக்கு தொடங்கி மோசடி

பேஸ்புக் மூலம் வலைவிரித்து, பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-05-30 02:56 GMT
உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் மஹேந்திர வர்மன். இவர் தான், மும்பையை சேர்ந்த பின்னணி பாடகரும், நடிகருமான அர்மான் மாலிக் என்று ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் பொய்யான கணக்கு துவங்கி கோவையில் பல பெண்களுக்கு அழைப்பு விடுத்து நண்பராகி பழகியதாக கூறப்படுகிறது. பின்னர், அவர்களின் புகைப்படத்தை பெற்ற அவர், அவற்றை ஆபாச புகைப்படங்களாக மார்ஃபிங் செய்து இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டி பெண்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்ததாக புகார் எழுந்தது. கோவையில் மட்டும் 15 மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர், பல பெண்களிடம் இப்படி, லட்சக்கணக்கில் மிரட்டி, பணம் பறித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பெண்களிடம் பறித்த பணத்தை வைத்து அவர் உல்லாசமாக வாழ்ந்து வந்தாகவும் தெரியவந்துள்ளது. இது குறித்து போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்