தேசிய அளவில் 3ஆம் இடம் வெண்கல பதக்கம் - தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள் சாதனை

தேசிய அளவிலான காரத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Update: 2019-04-14 15:02 GMT
கேரளா மாநிலம் மூணாறில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணியாற்றும் சேகர்- முத்துலட்சுமி தம்பதியின் மகள் ஹரிணிதான் இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். 4 ஆம் வகுப்பு முதல் பயிற்சி பெறும் ஹரிணி, தற்போது 12ம் வகுப்பு படித்து வருகிறார். தேசிய அளவில், மலேசியாவில் நடைபெற்ற 17 வயதினோருக்கான பிரிவில் 30 நாடுகளைச் சேர்ந்த 60 பேர் பங்கேற்றனர். இதில், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார் ஹரிணி. ஜூன் 22ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் ஹரிணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்