சாரதா சிட்பண்ட்ஸ் ஊழல் வழக்கு விவகாரம் - சி.பி.ஐ. முன்பு கொல்கத்தா காவல் ஆணையர் ஆஜர்

சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றும் ஆஜராகியுள்ளார்

Update: 2019-02-10 06:44 GMT
சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ராஜீவ் குமார் இன்றும் ஆஜராகியுள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ராஜிவ் குமார் ஆஜரானார். அப்போது, அவரிடம் 14 பேர் கொண்ட அதிகாரிகள் குழு எட்டரை மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக, இன்றும் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. இதற்காக, இன்று காலையில் மீண்டும் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு காலை 10 மணி அளவில் ராஜிவ்குமார் வந்தார். அவரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. இதுபோல, மம்தா கட்சியின் முன்னாள் எம்பி உறுப்பினர் குணால் கோஷ், இன்று சிபிஐ முன்பு ஆஜராக உள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்