ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி - மத்திய அரசு முடிவு
55 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு முதல் கட்டமாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
55 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு முதல் கட்டமாக ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைப்பதற்காக 2 ஆயிரத்து 345 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில், முதல் தவனையாக அடுத்த வாரம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏர் இந்தியா நிறுவனத்தை சீரமைக்க உருவாக்கப்பட்ட 10 ஆண்டுகால சீரமைப்பு திட்டம் 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.