இ மெயில் முகவரியை முடக்கி பல கோடி மோசடி - நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட 6 பேர் கைது
இ மெயில் முகவரியை முடக்கம் செய்து, போலி சிம் கார்டு மூலமாக பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இரண்டு நைஜீரியர்கள் உள்பட 6 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.
இ மெயில் முகவரியை முடக்கம் செய்து, போலி சிம் கார்டு மூலமாக பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்த வழக்கில் இரண்டு நைஜீரியர்கள் உள்பட 6 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக செம்ஷாபாத்தில் உள்ள எலிம் கெமிக்கல்ஸ், ஷாலாம் கெமிக்கல் இண்டஸ்ட்ரிஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர் பி. வெங்கடகிருஷ்ணா கடந்த டிசம்பல் 18 ஆம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, முக்கிய குற்றவாளியான இபிபோ இன்னோசென்ட், நைஜீரியாவில் இருந்தபடியே, போலி இ-மெயில் மூலமாக வெங்கட கிருஷ்ணாவின் தகவல்களை திருடி கொண்டு சிம் கார்டையும் போலியாக பெற்று பணப்பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஹென்றி , சந்தோஷ் பானர்ஜி , அன்கான் சஹா , ரஜட் குந்து, சந்தன் வர்மா, சஞ்சிப் தாஸ் ஆகியோர் இந்த மோசடிக்கு துணையாக இருந்ததும் விசரணையில் தெரிய வந்தது. இதை அடுத்து, நைஜிரியாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 6 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர். இதனை சைப்ராபாத்தில், செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறை ஆணையாளர் சஜனார் தெரிவித்தார். நைஜீரியாவில் உள்ள ஜேம்ஸ் விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா கொண்டு வரப்படுவார் என்றும், இந்த மோசடி கும்பல், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் உள்ள 24 நிறுவனங்களில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.