தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன - தமிழக அரசு
இரண்டரை ஆண்டுகளில் 401 வழக்குகளில் தண்டனை,1621 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்ககோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
* அப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக தலைமை செயலாளர் சார்பில் உதவி ஐ.ஜி மகேஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.
* அதில், 2016ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 11 ஆயிரத்து 625 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 257 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2017ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட 10 ஆயிரத்து 677 வழக்குகளில் 121 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
* நடப்பாண்டு ஏப்ரல் வரை 3 ஆயிரத்து 624 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23 வழக்குகளில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 2016ஆம் ஆண்டை விட 2017ல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாகவும்,
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.