14 பள்ளி குழந்தைகள் பலி.. சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. குஜராத்தில் பரிதாபம்
- குஜராத்தில் பள்ளி குழந்தைகள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 14 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் என 16 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ஹர்னி மோட்நாத் ஏரியில், சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகள் பயணித்த படகு, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் 27 குழந்தைள் இருந்த நிலையில், அதில் 14 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்த மீட்பு படையினர், ஏரியில் உயிருக்கு போராடியவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்தில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.