தொழிலதிபர் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி - மேற்குவங்கத்தைச் சேர்ந்த கும்பல் குறித்து விசாரணை
தொழிலதிபர் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி - மேற்குவங்கத்தைச் சேர்ந்த கும்பல் குறித்து விசாரணை
புதுச்சேரியில், மின்னஞ்சல் ஐடியை முடக்கி, போலி சிம்கார்டு மூலம் தொழிலதிபர் வங்கி கணக்கில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் திருடிய மர்ம
நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி பெரியார் நகரைச் சேர்ந்த பிரதாபன் என்பவர், தனியார் கட்டட நிறுவனம்
நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கில் இருந்து 2 தவணையாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டு
இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் அதற்கான குறுஞ்செய்தி அவரது செல்போன் எண்ணுக்கு வராமல், மின்னஞ்சல் ஐடிக்கு மட்டும் தகவல்
வந்துள்ளது. இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், பிரதாபனின் மின்னஞ்சல் ஐடியை ஹேக் செய்தும்,
அவரது செல்போன் எண்ணை போலி சிம்கார்டு மூலம் மாற்றி மோடிசயில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இந்த மோசடியில் மேற்கு வங்கத்தை
சேர்ந்தவர்களின் வங்கி கணக்குக்கு இந்த பணம் மாற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.