காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசன் ஒரு தனியார் பல்கலைகழகத்தில் பிசியோதெரபி படித்து வருகறார். பட வாய்ப்பு சரிவர கிடைக்காததால் பொருளாதார ரீதியாக பின்னடைவு அடைந்த தெனாலி, தன் மகனின் கல்விக்காக திரைத்துறையை சார்ந்தவர்களிடம் உதவி கேட்டிருந்தார். இதை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், அவர்களை நடிகர் விஜய் சேதுபதியிடம் அழைத்துச் சென்று நிலமையை கூற, உடனடியாக 76 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை விஜய் சேதுபதி கல்லூரியில் கட்டி உதவி செய்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் மறக்கவே முடியாது என தெனாலி நன்றி தெரிவித்தித்துள்ளார்.