"ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கியுள்ளேன்! அதிரடி அரசியல், உறியடித்தால் பதவி" - நடிகர் மன்சூர் அலிகான்
டெல்லியில், தனது இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் பெயரை பதிவு செய்த நடிகரும், அரசியல்வாதியுமான மன்சூர் அலிகான், ஒரு முடிவுடன் அரசியலில் இறங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை பதிவு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சிக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், பல்லாவரத்தில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.