"இதுக்குலாம் பயப்படுறவன் நான் இல்ல" - திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் தடாலடி
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நான் வரும் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள நிலையில், வேண்டும் என்றே இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகிறது என குற்றம்சாட்டியுள்ளார். பழைய படங்கள் போல் கதாநாயகிகளுடன் நடிக்க, தற்போது வாய்ப்பில்லை என்பதைத்தான் காமெடியாக தெரிவித்தேன்... அந்த வீடியோவை கட் செய்து, அவதூறு பரப்பப்படுகிறது... இதெற்கெல்லாம் அஞ்சுபவன் நான் அல்ல என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, நான் எப்போதும் சக நடிகைகளுக்கு மரியாதை கொடுப்பவன் என்றும் த்ரிஷாவிடம் நான் பேசிய வீடியோவை தவறாக கட் செய்து காண்பித்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளார். இறுதியாக, உலகத்தில் எத்தனையோ வேலை இருக்கு... போய் பொழப்ப பாருங்கப்பா... என்றும் தெரிவித்துள்ளார்.