"மனசே உடைஞ்சிருச்சு..இப்படி பண்ணியிருக்க கூடாது" - மன்சூர் அலிகானுக்கு Fanboy லோகேஷ் கனகராஜ் கண்டனம்

Update: 2023-11-19 08:57 GMT

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை த்ரிஷா குறித்து அளித்த பேட்டி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மன்சூர் அலிகானுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மன்சூர் அலிகான் பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், பாலின பாகுபாட்டை பிரதிபலிக்கும் வகையில் மரியாதைக்குறைவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இவரைப் போன்ற ஒருவருடன் இணைந்து நடிக்காததை நினைத்து நிம்மதி அடைந்துள்ளதாகவும், இனி சேர்ந்து நடிக்கவும் மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ள த்ரிஷா, மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், மன்சூர் அலிகானின் த்ரிஷா குறித்த அவதூறு பேச்சுக்கு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், மன்சூர் அலிகானின் பேச்சை கேட்டு மனமுடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் எந்த துறையாக இருந்தாலும் பெண்கள், சக கலைஞர்கள், தொழில்முறை வல்லுநர்கள் என அனைவருக்கும், சமரசமின்றி மரியாதை அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்