பிரபல நடிகர் இறந்த `காரணம்'.. அம்பலப்பட்டு நிற்கும் பயில்வான்.. "விபரீதத்தில் முடிந்த வியூஸ் வெறி''

Update: 2024-08-21 05:53 GMT

சுருளிராஜன் விஷ்வல்களை வைத்து மாண்டேஜ் வைத்துக் கொள்ளவும்..

எம்.ஜி.ஆர். சிவாஜி காலம் தொடங்கி பழம்பெரும் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் சுருளிராஜன்..

எம்.ஆர். ராதாவை போல் தனித்துவமான குரலால் ரசிகர்களை ஈர்த்த சுருளிராஜன், எதார்த்தமான நடிப்பு, நகைச்சுவையான உடல் மொழியால் தனக்கென திரைத்துறையில் தடம் பதித்தார்....

ஒரு ஆண்டுக்கு 50 படங்களில் நடித்து அதகளப்படுத்தினார் சுருளிராஜன். ரஜினியின் ஜானி, முரட்டுக்காளை, பொல்லாதவன், கழுகு என பிரதான படங்களில் எல்லாம் சுருளிராஜனின் காம்பினேஷன் ரசிகர்களை கவர்ந்தது..

இப்படி அடுத்தடுத்து ஓடிக் கொண்டிருந்த சுருளிராஜன் திடீரென தன் 42வது வயதில் மரணித்து போனார்...

திரைத்துறைக்கு இவரின் இழப்பு பேரிழப்பு என்றாலும் கூட, காலப்போக்கில் அவரை மறந்து அடுத்த நடிகர்களை நோக்கி நகர்ந்து விட்டது திரையுலகமும், ரசிகர்களும்..

ஆனால் பயில்வான் ரங்கநாதனால் வந்து சேர்ந்திருக்கிறது இப்போது புது வில்லங்கம்.. cபொதுவாக விஐபிகள் குறித்து சர்ச்சை கிளப்பி வரும் பயில்வான் ரங்கநாதன், 1980ல் உயிரிழந்த சுருளி ராஜன் பற்றி பேசியது அவரை சார்ந்தவர்களை நோகடித்திருக்கிறது...

மதுப்பழக்கத்திற்கு அடிமையான சுருளிராஜன், அளவு கடந்து குடிப்பதால் அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்து மருந்துகள் வரவைத்து கொடுத்தும் அவரை காப்பாற்ற முடியாமல் உயிரிழந்து விட்டதாக கூறியிருக்கிறார் பயில்வான்...

சுருளிராஜனின் கால்ஷீட் வேண்டி செல்பவர்கள் எல்லாம் அவருக்கு வெளிநாட்டு மது வாங்கி கொடுத்தே காரியத்தை சாதித்து இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.

சுருளிராஜனின் மரணத்திற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் கஷ்டப்படுகிறார்கள் என்றும் பேசி வழக்கம்போல லைக்ஸ்களை அள்ளியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்..

ஆனால் அவரின் இந்த பேட்டியால் கொந்தளித்து போயிருக்கிறார் சுருளிராஜனின் மனைவி முத்துலட்சுமி.

என்னுடைய கணவர் சுருளிராஜன் குடித்து தான் இறந்தார் என யார் சொன்னாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது.. நீங்க என்ன பக்கத்தில் இருந்து பார்த்தீர்களா? அல்லது என் குடும்பத்தில் இருந்து பார்த்தீர்களா? என கோபமுடன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.. எதுவுமே தெரியாமல், யூட்யூபில் இருந்து கிடைக்கும் வருமானத்திற்காக எங்களை பற்றி தவறாக பேசலாமா? என கோபத்துடன் யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் முத்துலட்சுமி..

சுருளிராஜன் மரணம் தொடர்பான பேச்சுகளும், பேட்டிகளும் இணையத்தில் விவாதத்தை கிளப்பியிருக்கும் சூழலில் இதுபோன்ற வதந்திகளும், சர்ச்சை பேச்சுகளுக்கும் இல்லையா ஒரு எண்டு? என கேள்வி எழுப்பி வருகின்றனர் இணையவாசிகள்...

Tags:    

மேலும் செய்திகள்