துபாயில் உள்ள மேடம் டுசாட்ஸில் (Madame Tussauds), நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை நிறுவப்பட்டுள்ளது. இது குறித்து மேடம் டுசாட்ஸ் பொது மேலாளர் கூறுகையில், தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகர் அல்லு அர்ஜூன் என்பதில் சந்தேகமில்லை எனவும், இதனை நிறுவியிருப்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், மெழுகு சிலையை கண்டது, தன்னை தானே கண்ணாடியில் பார்த்தது போன்ற அனுபவத்தை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்