இந்தியாவை உளவு பார்க்குமா சீன கப்பல்.? தடுத்து நிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தல்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், சீனாவின் உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவும்...
இந்தியாவை உளவு பார்க்க வரும் சீன கப்பலை தடுத்த நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தகவலில், சீனாவின் உளவு கப்பல் அம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகவும், அந்த கப்பலின் மூலம் வான்வழியாக 750 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு அதிகமாக உளவு பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் போன்ற அணு ஆராய்ச்சி மையங்கள் கண்காணிக்கப்படும் என்றும், கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள் உளவு பார்க்க முடியும் என்றும் எச்சரித்துள்ளார். இதனால், இலங்கை அரசின் செயலை கண்டித்து, உடனடியாக அதை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
Next Story