"வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர்" - ஆளுநருக்கு அமைச்சரவை சொன்ன தகவல்

x

வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில், சட்டப்பேரவைத் கூட்டத் தொடரை வரும் 21-ஆம் தேதி கூட்டுவதற்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி பேரவையைக் கூட்டுவதற்கு ஆளுநர் அனுசுயா உய்கே அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்படவில்லை. இருப்பினும், இரு இன குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு நடந்த கலவரம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்