இரட்டை கருப்பையில் இரட்டை குழந்தைகள்.. பிறந்த முறையில் மட்டும் ஒரு மாற்றம்

x

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 2 கருப்பைகள் கொண்ட அதிசய பெண்ணிற்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது... பிர்மிங்காம் மருத்துவமனையில் கெல்சே ஹேட்சர் என்ற அப்பெண்ணிற்கு 2 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன... அவர்களுக்கு ரோக்சி லைலா, ரெபெல் லேகன் என்று பெயரிடப்பட்டுள்ளது... இரட்டைக் கருப்பைகளில் ஒரு கருப்பையில் ரோக்சி லைலாவும், மற்றொரு கருப்பையில் ரெபெல் லேகனும் இருந்துள்ளனர்... ஹேட்சரின் முந்தைய 3 குழந்தைகளைப் போல முதல் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்த நிலையில், மற்றொரு குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்