"இஸ்ரேலின் அரக்கத்தனத்துக்கும் ஒரு எல்லையுண்டு" - சிலி அதிபர் குற்றச்சாட்டு
சிலி அதிபர் கேப்ரியல் போரிக், ஹமாஸ் தாக்குதல்கள் நியாயமற்றவை... அவை உலகளாவிய கண்டனத்திற்கு தகுதியானவை என்றபோதிலும், அதற்கான இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அரசாங்கத்தின் பதில் தாக்குதலானது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியுள்ளது என சாடியுள்ளார்... அமெரிக்கா சென்று அந்நாட்டு அதிபர் பைடனை சந்தித்த போரிக் இவ்வாறு தெரிவித்தார்... மேலும் ஒரு நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ள வரம்புகள் உள்ளது என்றும், அந்த வரம்புகள் அப்பாவி பொதுமக்களின், குறிப்பாக குழந்தைகளின் உயிர்களை மதிப்பது என்றும் போரிக் இஸ்ரேலைக் குற்றம் சாட்டியுள்ளார்...
Next Story