வங்கதேசத்தில் வன்முறை வெறியாட்டம்... காவல் அதிகாரி துடிதுடிக்க கொலை
வங்கதேச தேசியக் கட்சியின் தலைவர் கலேடா ஷியா மீதான வழக்குகளை கைவிட்டுவிட்டு, வெளிநாட்டில் சிகிச்சை பெற அனுமதிக்கக் கோரி, அக்கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பலர் கைது செய்யப்படுவதால், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும், ஜனவரியில் பொதுத்தேர்தல் நடைபெறும் வரை இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, டாக்காவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் வன்முறை வெடித்த நிலையில், ராஜர்பாக்கில் உள்ள காவல்துறை மருத்துவமனையை சூறையாடினர். அங்கிருந்த வாகனங்களையும் தீ வைத்து எரித்ததோடு, சாலைகளில் சென்ற வாகனங்களையும் சேதப்படுத்தினர். இந்த வன்முறையில் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துமவனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story