நாடாளுமன்றம் கலைக்கப்படும். பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு
வரும் 9ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.
தற்போதைய பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் 12ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களைக் கவுரவித்து அளிக்கப்பட்ட விருந்தில் கலந்து கொண்ட Shahbaz Sharif, நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து முழுமையாக விவாதித்த பிறகு, இம்முடிவை அறிவித்துள்ளார். தற்காலிக பிரதமர் மற்றும் காபந்து அரசு உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகளுடன் 3 நாட்கள் ஆலோசனை நடத்திய பிறகு தற்காலிக பிரதமரின் பெயரை அதிபரிடம் சமர்ப்பிப்பதாக Shahbaz Sharif அறிவித்துள்ளார்.
Next Story