ஃபிஜி தீவில் இஸ்ரோ - விண்ணில் அடுத்த அடியை எடுத்து வைத்த இந்தியா

x

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை 4-வது முறையாக, வெள்ளிக்கிழமை அதிகாலை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக, கடந்த 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை இதுவரை 3 முறை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 4-வது முறையாக புவி சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டதை மொரீஷியஸ், பெங்களூரு, போர்ட் பிளேயர், ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்களில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும், இந்த விண்கலத்திற்கு உதவ ஃபிஜி தீவில் ஒரு கட்டுப்பாட்டு மையத்தை இஸ்ரோ அமைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்