சர்வதேச சமையல் - Chicken Fricassee மெர்சலாக வைக்கும் பிரான்ஸ் ரெசிபி...

x

சர்வதேச சமையல்ல இன்னைக்கு நாம டேஸ்ட் பண்ண போறது

French நாட்டு ரெசிபியான Chicken Fricassee...

நம்ம ஊர்ல நான்வெஜ்னு சொன்னதுமே பெரும்பாலானவங்களுக்கு நியாபகம் வர்ரது சிக்கன் தான்.

ரோட்டுக்கட பக்கோடாவுல ஆரம்பிச்சு, 5 ஸ்டார் ஓட்டல் வரைக்கு சிக்கன விதவிதமா வித்யாசமா சமச்சு பொளந்து கட்டிகிட்டு இருக்கோம்..

நம்மலமாதிரியே French காரங்களும் அவங்க பங்குக்கு கண்டுபிடுச்ச அசத்தல் ரெசிபிதான் இந்த Chicken Fricassee...

சரி... சரி... ஓவரா பேசாம சட்டுபுட்டுனு சமைக்க ஆரம்பிக்களாம் வாங்க...

Chicken Fricassee செய்றதுக்கு தேவையான பொருட்கள்... சிக்கன்., ஆலிவ் ஆயில், பட்டர், உப்பு , மிளகு தூள், fresh cream, வெங்காயம், காளான், தைம் இலை பவுடர், பூண்டு, அரிசி மாவு அம்புட்டு தான் இனி சமையலை ஸ்டார்ட் பண்ணிடலாம்...

முதல்ல நம்ம ரெசிப்பியோட ஹீரோ boneless chicken-அ எடுத்துக்கலாம்...

வரிசையா படுத்திருக்குற சிக்கன் பீஸ் மேல, கொஞ்சம் உப்பு, மிளகு தூள் இரண்டையும் தேவையான அளவுக்கு பரபரனு தூவி விட்டுக்கனும்.

ஒரு கடாய்ல 40 கிராம் பட்டர போட்டு... அது உருகி ஓட ஆரம்பிச்சதும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில விட்டு... பட்டர் முழுசா உருகுனதும், வெட்டி வச்ச சிக்கன போட்டு பொரிச்சுக்கனும்...

சிக்கன் நால்லா பொரிஞ்சதும் அத கொஞ்ச நேரம் பிரேக் கொடுத்து ஓரமா வச்சுடுங்க.

இனிமே தான் நம்ம குக்கிங்கோட முக்கியமான வேலைய ஆரம்பிக்க போறோம்... 2 வெங்காயத்த நீளவாக்குல கட் பண்ணி எண்ணையில் போட்டு லேசா வதக்கி விட்டு... வெங்காயத்துக்கு துணையா 200 கிராம் காலான்ன பொடி பொடியா நறுக்கி இதோட சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க...

இப்போ ஒரு ஸ்பூன் அரிசிமாவும் சேர்த்து...

நல்லா பொண் நிறமா வதங்குனதுகப்பறமா 200 ml vegetables stock-அ ஊத்தி... அதுக்கூடவே 100 ml fresh cream சேர்த்து ஒரு கலக்கு கலக்கி விடுங்க.

சமையலோட அடுத்தகட்டமா... உப்பு, மிளகு தூள் ரெண்டையும் லைட்டா தூவி விட்டு, அதுக்கூடவே தேவையான அளவுக்கு

பொடியாக்குன தைம் இலையவும் தூவி விட்டுக்களாம்.. எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து நல்லா கலக்கு கலக்குனு கலக்கிகோங்க...

ப்பா.. வாசம் இப்பவே பட்டய கிளப்புது.... அதுக்காக அப்படியே சாப்ட்றாதீங்க.

லேசா கொதிக்க ஆரம்பிச்சிடுச்சு... இப்போ ஓரமா வச்சுருக்குற சிக்கன் பீஸ்ஸ எடுத்து ஒவ்வொன்னா உள்ள மிதக்க விட்டு அப்படியே மூடி

சரியா 10 நிமிசம் கழிச்சு மூடிய திறந்து பார்த்தா நம்ம ரெசிப்பி முக்கல்வாசி ரெடியாகிடுச்சு...

அதுகப்புறம் தேவையான அளவு கொஞ்சமா பூன்டு பேஸ்ட் சேர்த்து கலக்கிவிட்டு... கடைசியா 5 நிமிசம் கொதிக்கவிட்டு இறக்குனா அட்டகாசமான Chicken Fricassee ரெடி..

இன்னும் ஏன் வெறிக்க வெறிக்க வேடிக்கை பாத்துகிட்டு... பொடியா நறுக்கின கொத்தமல்லிய மேல தூவிவிட்டு... Chicken Fricassee -அ எஞ்சாய் பண்ண ஆரமிக்கலாம் வாங்க...


Next Story

மேலும் செய்திகள்