போர் நிறுத்த ஒப்பந்தம்..? புது புயலை கிளப்பிய இஸ்ரேல் பிரதமர் - பேரிடியான திடீர் அறிவிப்பு

x

ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் மற்றும் இஸ்ரேலின் தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருடனான ஆலோசனைக்குப் பிறகு நெதன்யாகு இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நெதன்யாகுவின் இந்தக் கருத்து கவலைகளை எழுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்