இந்தமுறை வேறு முகம்... இஸ்ரேலில் கால் வைக்கும் அமெரிக்கா... போரில் புதிய திருப்பம்?

x

இஸ்ரேல் படைகளின் காசா மீதான தாக்குதலால் கொல்லப்படும் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல் வந்தடைந்தார். இஸ்ரேலுக்கு புறப்படும் முன்னர், பாலஸ்தீனிய மக்கள் பாதிக்கப்படுவதைக் குறைக்க இஸ்ரேலிடம் இருந்து உறுதியான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாக பிளிங்கென் தெரிவித்திருந்தார். கடந்த மாதமும் இஸ்ரேலுக்கு நேரில் வந்து ஆதரவு வழங்கிய பிளிங்கென், தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சூழலில், மீண்டும் அவரின் இஸ்ரேல் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்