தினமும் பேபி பவுடர் சாப்பிட்டு உயிர்வாழும் பெண்... ஒரு நாள் ஆசை.. அடிமையாக்கிய சோகம்
- அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியை சேர்ந்தவர் ட்ரெக்கா மார்டின்.
- 27 வயதான இவர், குழந்தைக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடருக்கு அடிமையாகி, அதனை தினமும் உண்டு வருகிறார்.
- தினந்தோறும் 623 கிராம் பவுடரை உண்டு வரும் இவர், இந்த வருடத்தில் மட்டும் பேபி பவுடருக்காக இந்திய மதிப்பில், சுமார் 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
- தனக்கு உணவு இல்லாத பொருட்களை சாப்பிடும் நோய் உள்ளதாக கூறியுள்ள ட்ரெக்கா மார்டின், பேபி பவுடரை உண்பதால் தனக்கு இதுவரை எந்த உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பவுடரை உண்பது தனக்கு மகிழ்ச்சியை தருகிறது எனவும் கூறியுள்ளார்.
Next Story