சீனாவை மிரட்டும் கொரோனா - பள்ளிகளுக்கு விடுமுறை

சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருதால் 1200 படுக்கைகள் கொண்ட மொபைல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
x
 சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருதால் 1200 படுக்கைகள் கொண்ட மொபைல் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டிற்கு பிறகு மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு மூவாயிரத்து 400ஐ நெருங்கி வருவதால் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டு வடகிழக்கு பகுதிகளில் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் 400 தனிமைப்படுத்த அறைகளும், ஆயிரத்து 200 படுக்கைகளும் கொண்ட மொபைல் மருத்துவமனை 16 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் கட்டப்பட்ட மொபைல் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பு மிகுந்த பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்