ஃபேஸ்புக் பார்த்தால் கன்னத்தில் அறை!பெண்ணைப் பணியமர்த்திய தொழிலதிபர் - ஆச்சரியப்பட்ட எலான் மஸ்க்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கத் தொழிலதிபர் ஒருவர் தான் ஃபேஸ்புக் பார்க்கும் நேரத்தில் எல்லாம் தன்னை அடிப்பதற்காக பெண் ஒருவரை பணியில் அமர்த்திய சம்பவம் இணையத்தில் அதிகம் பேரை ஆச்சரியப் படுத்தியது.
பாவ்லோக் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் மணீஷ் சேத்தி, தன்னை ஃபேஸ்புக் பார்ப்பதில் இருந்து தடுப்பதற்காக காரா என்ற பெண்ணை பணியில் அமர்த்தினார். சேத்தி ஃபேஸ்புக் பார்க்கும் பொழுது எல்லாம் அவரை அறைவது தான் காராவின் வேலை. இதனால் அவரது நிறுவனத்தின் உற்பத்தியானது பல மடங்கு உயர்ந்துள்ளதாக சேத்தி தெரிவித்திருந்தார். சேத்தியின் ட்வீட்டைக் கண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
Next Story