7 கிலோ கஞ்சா, 3,600லி பெட்ரோல் கடத்தல் - சினிமா பாணியில் துரத்திப் பிடித்த அதிகாரிகள்
மெக்சிகோவில் சட்ட விரோதமாக கடத்த முயன்ற 7 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் 3 ஆயிரத்து 600 லிட்டர் எடையுள்ள பெட்ரோலை கடற்படை அதிகாரிகள் பத்திரமாக கைப்பற்றினர்.
பஜா கலிஃபோர்னியாவில் உள்ள என்செனடா கடற்பகுதியில் 5 பேர் இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபடதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குற்றவாளிகளைப் பிடிக்க 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் சினிமா பாணியில் துரத்திப் பிடித்து குற்றவாளிகளைக் கைது செய்தனர்.
Next Story