பிரிட்டனில் ஓட்டுநர்கள் பற்றாகுறை - சரக்கு போக்குவரத்து பாதிப்பு

பிரிட்டனில் கொரோனா பரவல் குறைந்த பின், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், லாரி ஓட்டுநர்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஓட்டுநர்கள் பற்றாகுறை - சரக்கு போக்குவரத்து பாதிப்பு
x
90,000 லாரி ஓட்டுநர்கள் புதிதாக தேவைப்படுவதால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சூப்பர் மார்க்கெட்டுகளில் சில பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் உணவு விநியோகம் செய்து வந்த பலரும், தற்போது லாரி ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெற்று வருகின்றனர். பிரிட்டனில் ஆண்டுக்கு சுமார் 40,000 பேர் லாரி ஓட்டுநர்களாக தேர்ச்சி பெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டில் கொரோனா பாதிப்பினால், இந்த எண்ணிக்கை 13,000ஆக குறைந்ததால், ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த 5 மாதங்களில் ஓட்டுநர்களுக்கான சம்பளம் 5.7 சதவீதம் உயர்ந்துள்ளது. டெஸ்கோ, மார்க்ஸ் அன்ட் ஸ்பென்சர் போன்ற பிரபல சூப்பர் மார்க்கெட்கள்,  புதிய ஓட்டுநர்களுக்கு 5 லட்சம் ரூபாய ஊக்க போனஸ் தொகை அளிக்கின்றன. இதனால் பிரிட்டனில், முன்னாள் விமான ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் லாரி ஓட்டுநர் பயிற்சி பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்