ஐ.எஸ் ஆதரவாளர் நடத்திய தாக்குதல்: ஆறு பேருக்கு கத்திக் குத்து
நியூசிலாந்து நாட்டின் ஆக்லந் நகரில், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலை நடத்திய ஐ.எஸ் இயக்கத்தின் ஆதரவாளரை
ஆக்லந்த் காவல்த் துறையினர் சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடத்திய நபர் 2011இல் இலங்கையில் இருந்து நியூசிலாந்திற்கு வந்தவர் என்றும், பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் பட்டியலில் அவர் இடம் பெற்றிருந்தார் என்று நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஆறு பேரில், மூன்று பேர் நிலை
அபயகரமாகவும், ஒருவரின் நிலை கவலைக்கிடமாகவும் உள்ளதாக செய்ன்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Next Story